கணவர் இறந்த துக்கத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

கொரோனா தொற்றால் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி செல்வராஜ் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதனால் மனவேதனை அடைந்த அவரது மனைவி லீலா (வயது 65) தன்னுடைய கணவர் இறந்த நாள் முதல் துக்கம் தாங்க முடியாமல் வருத்தத்தில் இருந்து வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் தன்னுடைய கணவரை நினைத்து அழுது புலம்பி கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த லீலா கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் லீலா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com