கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஹரித்வார் கும்பமேளா நிகழ்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

இந்துக்களுக்கு மிகப்பெரும் திருவிழாக்களில் ஒன்றாக கும்பமேளா இருக்கிறது. இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆற்றங்கரை ஒன்றில் மாபெரும் கூட்டம் கூடியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கூடிய பக்தர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது, அது 2019 கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை தனியார் செய்தி நிறுவனம் ஜனவரி 15, 2019 அன்று பயன்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், வைரல் புகைப்படம் சமீபத்திய கும்பமேளாவில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com