நன்னிலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

நன்னிலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நன்னிலம்:

திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை பகுதியை சேர்ந்தவர் பக்கிரி(வயது60). இவர் நன்னிலம் அருகே உள்ள ஆணைகுப்பம் ஆற்றங்கரை தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. 

சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பக்கிரி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com