நெல்லையில் முதியவர் திடீர் உயிரிழப்பு

நெல்லையில் முதியவர் திடீர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

நெல்லை:

தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளம் பகுதியை சேர்ந்தவர் வேசம் (வயது 66). இவர் சம்பவத்தன்று நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து அப்பகுதி வழியாக வந்தவர்கள் சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com