ஈரோடு சுடுகாட்டில் முதியவர் கொலை- போலீசார் விசாரணை

நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டுவை தலையில் கல்லால் தாக்கியுள்ளனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் இன்று காலை பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அவரது உடல் அருகே ரத்தக்கறையும் படிந்து இருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த அசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டுவை தலையில் கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர் உயிருக்கு போராடிய அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக் கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கருங்கல் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குபதிவு செய்து அசேன் சேட்டுவை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com