நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

நாமக்கல்:

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் நடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com