நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- என்ஜினீயர் கைது

காரிமங்கலம் அருகே காதல் தொல்லையால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை ஊராட்சி கிரைகொடஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் லிஷாலினி (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் ஊர்கவுண்டர் கொட்டாயை சேர்ந்த என்ஜினீயர் தவமணி (27) என்பவர் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும், வரும்போதும் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் என்ஜினீயர் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் தவமணியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com