தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்த குழுவால் எந்த பயனும் இல்லை -கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். 

பொதுச் செயலாளர்களாக 57 பேர், துணைத்தலைவர்கள் 32 பேர், செயலாளர்கள் 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, 34 பேர் கொண்ட தேர்தல் குழு, 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு, 31 பேர் கொண்ட விளம்பரக் குழு, 38 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பாக அக்கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கார்த்தி சிதம்பரம்  இடம்பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com