மதுரையில் ஒரே நாளில் ஆயுதங்களுடன் 9 பேர் கைது

மதுரை-திண்டுக்கல் மெயின் ரோடு, பெட்ரோல் பங்க் அருகில் ரோந்து சென்ற கூடல்புதூர் போலீசார் அங்கு பதுங்கி இருந்த 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை தெப்பக்குளம் போலீசார், அனுப்பானடி உப்புக்கார மேடு ரெயில் தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 3 பேர் பதுங்கி இருந்தனர்.

போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போலீசார் மேல அனுப்பானடி காமாட்சி தெருவைச் சேர்ந்த ஓட்டையன் செந்தில் (28), பொண்ணு பிள்ளைத்தோப்பு ராஜவேல் (24), வண்டியூர் மாந்தோப்பு துரைப்பாண்டி மகன் பாப்பி அருண் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை-திண்டுக்கல் மெயின் ரோடு, பெட்ரோல் பங்க் அருகில் கூடல்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கூடல்புதூரில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், ஹார்விபட்டி ஹரி சம்பத் (24), ஆணையூர் தமிழ் நகர் விஜய் (24), சிக்கந்தர் சாவடி சக்கரத்தாழ்வார் தெரு மனோஜ் குமார் (23), ஆணையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி அம்ஜத்கான் (25), தினேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

புதூர் செந்தில்குமரன் தெருவில் உள்ள மாட்டுக் கொட்டகையில் அரிவாள்களை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்தரங்கனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com