திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை ஒத்தக்கடை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த ஆண்டி மகள் கருப்பாயி (வயது 23) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

பூமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த வாரம் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட கருப்பாயி, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து கருப்பாயியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் விரக்தியுடன் காணப்பட்ட கருப்பாயி சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கருப்பாயி தந்தை ஆண்டி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com