குரும்பூர் அருகே ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி

திருமணமாகி 50 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மரணம்
மரணம்
Published on

குரும்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது முபாரிஸ் (வயது 27). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் சேதுக்கு வாய்த்தானை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் பக்ரீத் திருநாளையொட்டி முகமது முபாரிஸ் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேதுக்கு வாய்த்தான் பஞ்சாயத்து பின்புறமுள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளார்.

இவர் குளித்துக் கொண்டே ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி தத்தளித்து உயிருக்கு போராடினார்.

உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி முகமது முபாரிஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

திருமணமாகி 50 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com