

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த தினமும் 60 ஆக்சிஜன் சிலிண்டர் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது.
இந்த சிலிண்டர் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசிடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பிளான்ட் வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அதனையொட்டி தமிழக அரசு ரூ.50 லட்சம் செலவில் குஜராத் மாநிலத்தில் இருந்து இந்த ஆக்சிஜன் பிளான்ட் மற்றும் ஆக்சிஜன் அறை நிறுவப்பட்டது.
இதன் மூலம் தினமும் 1.5 கிலோ திரவ ஆக்சிஜன்(டன்) தயார் செய்யலாம், இனி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன்தட்டுப்பாடு ஏற்படாது.
இதன் மூலம் 2000 பேருக்கு சுவாசிக்க ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த ஆக்சிஜன் பிளான்டில் இருந்து கொரோனா வார்டு மற்றும் ரூ.18 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடத்திற்கும் ஆக்சிஜன் குழாய்கள் மூலம் கொண்டு சென்று படுக்கையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க தயார் நிலையில் உள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் போதும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கும் ஆக்சிஜன் இல்லை என்ற நிலை ஏற்படாது.
மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு போடப்படும் ரெமிட்டிஸ்ரீ ஊசி மருந்து கையிருப்பு உள்ளது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆக்சிஜன் பிளான்ட் இன்று முதல் செயல்பட தொடங்கியது.