வெவ்வேறு சம்பவத்தில் மூதாட்டிகள் தூக்குப் போட்டு தற்கொலை

வெவ்வேறு சம்பவத்தில் மூதாட்டிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

நெட்டப்பாக்கம்:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி மணிமேகலை (வயது 60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாண்டுரங்கன் இறந்துவிட்டதால் மணிமேகலை தனது இளைய மகன் மணிகண்டன் பராமரிப்பில் இருந்து வந்தார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மணிமேகலை அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை புறக்காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் கனகசெட்டிக்குளம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி முத்துலட்சுமி (85) வயது முதிர்ச்சியினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com