நெமிலியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

நெமிலியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

நெமிலி:

நெமிலி சத்திர தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவருடைய மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com