நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாட்றம்பள்ளி:

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராவரம் பூஞ்சோலை பகுதியில் சாராயம் விற்பதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானம்மாள் (வயது 45) என்பவர் வீட்டின் அருகே சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 63 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com