நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாட்டறம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா கூத்தாடும் குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை உறவினர் மகன் முருகனுடன் சேர்ந்து புத்துக்கோவிலை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஜீவாநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற ஒரு கார் திடீரென அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை, அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com