நாமக்கல்லில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார்.
தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெறும் விவசாயிகள் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் பொன்னுசாமி, விமலா சிவகுமார், மாவட்ட பொருளாளர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர் ராணி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாயவன், அழகரசு, வனிதா செங்கோட்டையன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com