மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் தகராறு: வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பொட்டல்விளை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ராஜா (வயது 20). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது வாகனமும் அந்த வழியாக ராமன்புதூர் மோரீஸ் தெருவை சேர்ந்த மதன் (35) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதின. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மதன், அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ஆல்வின்செல்வராஜ்(35), ஆல்வின்செல்வ சேவியர் (33), புன்னைநகர் நவின்குமார்(27) உள்பட 5 பேருடன் சேர்ந்து பிரதீப் ராஜாவை தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில் மதன், ஆல்வின்செல்வராஜ் உள்பட 6 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மதனின் நண்பர்களில் ஒருவரது மோட்டார் சைக்கிளில் 2 கத்திகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த வாகனத்துக்கு நம்பர் பிளேட் இல்லாமலும் இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com