நாகையில் அரசு ஊழியர்கள் 7-வது நாளாக சாலை மறியல்- 27 பேர் கைது

நாகையில் அரசு ஊழியர்கள் 7-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

நாகப்பட்டினம்:

நாகை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 7-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராணி, வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 17 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com