நாகமலைபுதுக்கோட்டை அருகே கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன்கள் திருட்டு

நாகமலைபுதுக்கோட்டை அருகே கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் அப்பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 6 செல்போன்கள், மடிக்கணினி திருட்டு போயிருந்தது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com