நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது

நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கீழக்குயில்குடி கண்மாய்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் கீழக்குயில்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த காசிராஜன்(வயது 29) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காசிராஜனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com