நச்சலூர் அருகே விஷம் தின்ற பெண் பலி

நச்சலூர் அருகே விஷம் தின்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

நச்சலூர்:

நச்சலூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஜெகநாதன். லாரி டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கிருஷ்ணவேணியின் தந்தை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை இறந்ததால் கிருஷ்ணவேணி மனநலம் பாதித்தவர் போல இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 13-ந் தேதி எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீட்டில் கிருஷ்ணவேணி மயங்கி கிடந்தார். அவரை, ஜெகநாதன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com