முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தெற்குக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஜாம்புவானோடை தெற்குக்காடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபாகரன் (வயது30), ராமசாமி மகன் ராஜா (38) ஆகியோரை பிடித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com