முத்துப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன்(வயது60). இவரது மனைவிக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. பல முறை சிகிச்சை அளித்தும் மனைவியின் உடல் நிலை சரியாகாததால் மனமுடைந்த காளியப்பன் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com