முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் ராமர் மடத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது42). இவர் சம்வத்தன்று தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்கி வீட்டை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்மோட்டாரின் ‘பெல்ட்’ திடீரென கழன்று விழுந்தது.

அதை மகாலட்சுமி தொட்டதாக தெரிகிறது. இதனால் மகாலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எடையூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com