அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் அதிகாரி உள்பட பலர் பலி என தகவல்

அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துப்பாக்கிச்சூடு நடந்த சூப்பர் மார்க்கெட்
துப்பாக்கிச்சூடு நடந்த சூப்பர் மார்க்கெட்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி உள்பட பலர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com