மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

மூலனூர்:

மூலனூர் அருகே உள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் கணேசன். இவர் அந்த ஊரில் உணவகம் நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி சித்ரா இவர் தனது உணவகத்துக்கு தேவையான மாவை வீட்டில் உள்ள கிரைண்டரில் தயார் செய்வார். அதன்படி பொங்கலன்று உணவகத்துக்கு தேவையான மாவை கிரைண்டரில் அரைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சித்ரா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்து அவருடைய கணவர் கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்ராவை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாவு அரைத்து கொண்டிருக்கும்போது மின்சாரம் பாய்ந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com