வல்லத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்- விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் வல்லம் நோக்கி தஞ்சை திருச்சி சாலையில் வந்த போது முன்னையம்பட்டி பிரிவு சாலை அருகே பின்னால் வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து சுப்ரமணியத்தின் மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com