கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 2 மீனவர்கள் பலி

கடலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மீனவர்கள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கணேஷ்- ஆனந்தகுமார்
கணேஷ்- ஆனந்தகுமார்
Published on

நெல்லிக்குப்பம்:

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த மூர்த்திக்குப்பத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது 23). இதேபோல் நரம்பை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார்(23). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கடலூரில் இருந்து சென்னை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று திடீரென இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவர்கள் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான கணேஷ், ஆனந்தகுமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com