முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

முத்துப்பேட்டை அருகே மகள் திருமணத்துக்கு நாள் குறிக்க சென்ற போது மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் லிங்கத்தடி பள்ளியமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் முருகையன்(வயது47). விவசாயியான இவர் தனது மகளுக்கு திருமணம் தேதியை குறிப்பதற்காக இடும்பாவனத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றார். அடஞ்சவிளாகம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் முருகையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து அவரது மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com