ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 4 பேர் காயம்

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

ஆரணி:

வந்தவாசி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 35). மரக்கடையில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலைசெய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ராணிப்பேட்டை மாவட்டம் மோசூரில் உள்ள மனைவி நந்தினியை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாமரைப்பாக்கத்தில் இருந்து ஆரணி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ரமணன், தாமரைபாக்கம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் (25), முனுசாமி (45), அஸ்வின் (20) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ரமணன், ஞானசேகரன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com