எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி

எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் ஊராட்சி தோட்டம் உடையாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி நாகரத்தினம் (வயது 50). இவர் தனது மகன் ராஜ்குமாருடன் (24) என்பவருடன் நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜ்குமார் ஓட்டி சென்றார். நாகரத்தினம் பின்னால் அமர்ந்திருந்தார்.

எருமப்பட்டி அருகே வரகூர் இரட்டை கிணறு பகுதியில் சென்றபோது, நாமக்கல்லில் இருந்து பவித்திரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகரத்தினம் படுகாயமடைந்தார். ராஜ்குமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தாய், மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது நாகரத்தினம ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com