தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: டிரைவர் பலி

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

சாலியமங்கலம்:

தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் வெண்ணபுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது29). டிரைவர். நேற்றுமுன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடுத்த புலவர்நத்தம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com