நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி டிக்கெட் பரிசோதகர் பலி

நாகர்கோவிலில் சாலையை கடக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

நாகர்கோவில்:

பொன்மனையை சேர்ந்தவர் முருகன் (வயது 55). நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பணிமனை முன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் முருகன் மீது மோதியது. 

இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஐசக் தெருவை சேர்ந்த ராகே‌‌ஷ் (22) என்பவரை கைது செய்தனர். ராகே‌‌ஷ் சென்னையில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகள் செயல்படாததால் ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com