காங்கேயத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வக்கீல் பலி

காங்கேயத்தில் சாலையின் மைய தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

காங்கேயம்:

மோட்டார் சைக்கிள் விபத்தில் வக்கீல் இறந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள செப்பளாங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 56). வக்கீல். இவர் நேற்று காலை 11.15 மணிக்கு, மோட்டார் சைக்கிளில் காங்கேயம் - திருப்பூர் சாலையில் உள்ள தனியார் ஐஸ்கிரீம் கடை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஓட்டி வந் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராதவிதமாக, சாலையின் மைய தடுப்பு சுவர் மீதும், அங்கு நின்று கொண்டிருந்தவர் மீதும் மோதியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் இருந்த சேகரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு சேகரை பரிசோசித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com