2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்- போலீசார் விசாரணை

பாளை அருகே 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள ஆரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (வயது 31). இவர்களுக்கு அபிஷா (8), சிபிஷா (6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.

சமீபத்தில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இளவரசி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கும் செல்லவில்லை, உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து மனோகரன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியையும், 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

பாளை கே.டி.சி. நகரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் பச்சம்மாள். இவரது மகள் சூரிய பிரியா (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற சூரிய பிரியா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தகவல்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாயார் மகேஸ்வரி பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரியாவை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com