

ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி புகழைகாரன் வட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் இவரது மகன் பாண்டியன் (வயது 28).
இவர் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் புவனா என்கின்ற புவனேஸ்வரி (24)க்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிவினேஸ் என்ற வயது 3 குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் புவனேஸ்வரி தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தனது மனைவி மற்றும் மகன் காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றார்.