மது குடிப்பதை தாய் கண்டித்ததால் எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை

வலங்கைமான் அருகே மது குடிப்பதை தாய் கண்டித்ததால் எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி சர்வமானியம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் ராஜேஷ் (வயது25). விவசாய தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ராஜேஷ் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்றுவிட்டு வீட்டின் அறையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவருடைய தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜேசை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடிக்க கூடாது என தாய் கண்டித்ததால் வாலிபர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com