திருக்கோவிலூர் அருகே குழந்தையுடன் தாய் கடத்தல்

திருக்கோவிலூர் அருகே குழந்தையுடன் தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள புலிக்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகள் மஞ்சு(வயது 20). இவருக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தனை மருதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

யுகேஷ் என்ற 1½ வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புலிக்கல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் மஞ்சு தங்கி இருந்தார். பின்னர் அங்கிருந்து கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காத்தவராயன் மஞ்சுவை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. பின்னர் விசாரித்தபோது புலிக்கல் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்திக்(22) என்பவர் மஞ்சுவையும் அவரது குழந்தையையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் கார்த்திக் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com