பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
பேரறிவாளன்
பேரறிவாளன்
Published on

திருப்பத்தூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்றுடன் பரோல் முடிந்த நிலையில், நேற்று காலை 11.45 மணிக்கு அவரது வீட்டிலிருந்து பேரறிவாளன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் சந்தைக்கோடியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தநிலையில் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி பகுதியில் பேரறிவாளனை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் பாதி வழியிலேயே மீண்டும் ஜோலார்பேட்டைக்கு திரும்பியது. மதியம் 12.50 மணிக்கு பேரறிவாளன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com