மொரப்பூர் அருகே மாடுகள் திருடிய வாலிபர் கைது

மொரப்பூர் அருகே மாடுகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. விவசாயி. இவர் 2 கறவை மாடுகள், கன்றுகள் மற்றும் ஆடு ஆகியவற்றை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். சம்பவத்தன்று இவர் கொட்டகைக்கு சென்றபோது 2 மாடுகள், 2 கன்றுகள் மற்றும் ஆடு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ஓமலூர் அருகே உள்ள பெருமாள் கோவில் சந்தையில் மாடுகள் மற்றும் கன்றுகள், ஆடு ஆகியவற்றை ஒரு நபர் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மொரப்பூர் போலீசாருக்கு மாது தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து ெசன்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மணியம்பாடி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் (வயது 23) என்பதும், இவர் அதேபகுதியை சேர்ந்த சர்வேஷ்(32) என்பவருடன் சேர்ந்து மாடுகள், கன்றுகள், ஆட்டை திருடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோகண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் மாடுகள், கன்றுகள், ஆட்டை மீட்டு மாதுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான சர்வேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com