ஒரத்தநாடு அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள பரங்கி வெட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 41). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இரவு ராஜமாணிக்கம் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ராஜமாணிக்கம் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.24 ஆயிரம், செல்போன் மற்றும் சிகரெட் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது

இதுகுறித்து ராஜமாணிக்கம் பாப்பநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com