மோகனூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மோகனூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மோகனூர்:

மோகனூர் காந்தமலைமுருகன் கோவில், கிரிவல பாதை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மோகனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயன்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்த கண்ணதாசன் (வயது 40) என்பதும், அவர் லாட்டரி விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.1000 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com