மோகனூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

மோகனூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மோகனூர்:

மோகனூர் பஸ் நிலையம் பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீ்ட்டு விற்பனை நடைபெறுவதாக, மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் மோகனூர் பஸ் நிலையம் பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக, மோகனூர் புதுத்தெருவைச் சேர்ந்த பிரபு (வயது 30) ராசிகுமரிபாளையம் தெருவைச் சேர்ந்த சரவணன் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரிடம் இருந்து, நம்பர் குறிக்கப்பட்ட துண்டு சீட்டுகளும், ரூ.300 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com