மோகனூர் அருகே புரோகிதர் வீட்டில் நகை திருட்டு

மோகனூர் அருகே புரோகிதர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சி கணேசபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் அழகியசிற்றம்பலம். புரோகிதர். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவை காண சென்றார். பின்னர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் புரோகிதருக்கு போன் செய்து வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக கூறினர்.

இதனால் பதறியடித்து கொண்டு உடனடியாக ஊர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த செயின், தோடு உள்ளிட்ட நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கொடு்க்கப்பட்ட புகாரின்பேரில் மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com