மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

மோகனூர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குன்னிப்பாளையம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயகுமார், பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து அவரது மகன் சூர்யா (22) கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com