தேர்தல் நிலைப்பாடு என்ன? -ஆதரவாளர்களுடன் 3ம்தேதி ஆலோசனை நடத்துகிறார் மு.க.அழகிரி

சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்.
மு.க.அழகிரி
மு.க.அழகிரி
Published on

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். கட்சி தொடங்கும்படி ஆதரவாளர்கள் கூறினால், கட்சி தொடங்குவேன். 

ரஜினிகாந்த் சென்னை வந்தவுடன் அவரை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அழகிரி, திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com