மன்னார்குடியில் மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார்

மன்னார்குடியில் மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி அண்ணாமலை நாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 22-ந்தேதி வேலைக்கு சென்றவா் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து மாதவன் மனைவி ஷோபனா மன்னார்குடி போலீஸ் புகார் கொடுத்தார். அதன்பேல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை நாதர்கோவில் குளத்தில் ஆண் பிணம் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

குளத்தில் பிணமாக கிடந்தது மாயமான மாதவன் என்பது தெயவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் மாதவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com