மீஞ்சூர் அருகே கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

மீஞ்சூர் அருகே கொள்ளை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மீஞ்சூர்:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மீஞ்சூர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் எண்ணூரை சேர்ந்த பெரியதுரை (வயது 19), மெதூர் கிராமத்தை சேர்ந்த சின்னராசு (26), ராஜன் (24), மகாலிங்கம் (19), முத்துராசு (20) என்பதும் அவர்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையடித்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com