ஆவினில் நாட்டு மாட்டுப்பால் விற்க நடவடிக்கை- அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

தனி கண்டெய்னரில் இந்த பாலை ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வந்து தனியாக பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும். எனவே நாட்டு மாட்டு பால் விலை அதிகமாகும்.
அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்
Published on

போரூர்:

கோடம்பாக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர், ரகுபதி, நடிகர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவின் பால் கூடுதல் விலை விற்ற 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது

ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் என்னிடமோ, ஆவின் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கோ மக்கள் புகார் தெரிவிக்கலாம். அதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவினில் விரைவில் நாட்டு மாட்டுபால் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது அனைத்து வகை ஜாதி மாடுகளின் பால் ஏ-1 பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டு மாட்டு பால் விற்பனை செய்தால் அதை ஏ-2 பால் என்று தனியாக விற்பனை செய்யப்படும். இதற்காக தனியாக பால் பாத்திரங்கள், எந்திரங்கள் உபயோகப்படுத்த வேண்டும்.

தனி கண்டெய்னரில் இந்த பாலை ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வந்து தனியாக பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும். எனவே நாட்டு மாட்டு பால் விலை அதிகமாகும்.

இதுபற்றி மக்களிடம் கருத்து கேட்டு முதல்- அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com